புழல் மத்திய சிறையில் 9 கைதிகளுக்கு கொரோனா

சென்னை : புழல் மத்திய சிறையில் 2000க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும், 800க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர். பெண்கள் சிறை பிரிவில் 170க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு, புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 பேருக்கும், விசாரணை பிரிவில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் அந்தந்த அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: