மில்லிங் செய்யாமல் சாலை போடக்கூடாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை : மில்லிங் செய்யாமல் சாலை போடக்கூடாது என்றும், தவறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: சென்னையில் சாலை இடப்படும் பணிகளை இரவில் நேரில் ஆய்வு செய்து ‘மில்லிங்’ செய்யாமல் சாலை போடக் கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளேன். தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்து அறிவுறுத்தி உள்ளார்.

அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை இடும் பணிகளை மேற்கொள்ளும்படி மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: