×

குமரியில் தொடர் மழையால் ஊருக்குள் நுழைந்த பாம்புகள் 3 மடங்கு அதிகரிப்பு

நாகர்கோவில் : குமரியில் தொடர் மழையால் ஊருக்குள் புகுந்து பிடிபட்ட பாம்புகளின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளது. குமரியில் மழைக்காலங்களில் நீர்நிலைகளில் அடித்து வரப்படும் மலைபாம்புகள் மற்றும் இதர பாம்பு வகைகள் ஊருக்குள் புகுந்து பிடிபடுவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் காரணமாக 2 மாதங்களில் பிடிபட்ட பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஊருக்குள் மற்றும் வீடுகளில் புகுந்த 11 நல்லபாம்புகள், 3 கட்டுவிரியன், மலைப்பாம்பு 5, அணலி பாம்பு 6, கண்ணாடிவிரியன் பாம்பு 3, சாரபாம்பு 10, கொம்பேறி 3, ஆந்தை 3, தண்ணீர் பாம்பு 4, வவ்வால் 1, சுருண்டை 3 என்று வனத்துறையால் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டன. இதேபோல் டிசம்பர் மாதத்தில் 53 குரங்குகள், 7 மரநாய், உடும்பு 1, ஆந்தை 1, மலைப்பாம்பு 10, நல்லபாம்பு 11, சுருட்டை விரியன்1, சாரபாம்பு 6, கண்ணாடி விரியன்பாம்பு 6, தண்ணீர்பாம்பு 1, கொம்பேறி 3, அணலி 1, கட்ட விரியன் 1 என்று மொத்தம் 102 வன உயிரினங்கள், வனத்துறையால் பிடிக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டுள்ளன.

கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் 9 நல்லபாம்புகள், 2 கண்ணாடி விரியன், 3 சாரை பாம்புகள், 2 மண்ணுளி, 1 கட்டுவிரியன், 1 கொம்பேறிமூக்கன், 5 மலைப்பாம்புகள், ஒரு காட்டு பூனை, ஒரு மரநாய் என்று 26 வன உயிரினங்கள் பிடிபட்டன. அதே ஆண்டு டிசம்பரில் 2 கட்டுவிரியன், 12 நல்லபாம்பு, ஒரு கொக்கு, ஒரு கொம்பேறி மூக்கன், 8 சாரைபாம்பு, ஒரு மரநாய், 5 மலைபாம்பு, 5 நீர் ஆமை, கண்ணாடி விரியன், கருப்பு ஐபீன் பறவை, உடும்பு, பாம்புத்தாரா, பருந்து, ஆந்தை ஆகியவை தலா 1ம், 2 அணலி பாம்புகள் என்று மொத்தம் 39 வன உயிரினங்கள் பிடிபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்மழை காரணமாக இந்த 2 மாதங்களில் அதிகள அளவில் பாம்புகள் பிடிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட வனஅலுவலர் இளையராஜா கூறினார்.

இனி வனத்துறைதான் பிடிக்கும்

ஊருக்குள் புகுந்து விடும் பாம்பு உள்ளிட்ட வன உயிரினங்களை வனத்துறை மட்டுமின்றி தீயணைப்பு மீட்பு படையினரும் மீட்டு வனத்தில் விட்டு வந்தனர். இதில் தீயணைப்பு மீட்பு படையினர் வன உயிரினஙகளை பிடிக்க செல்லும் போது, அவர்களது பணிகள் பாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு, வன அலுவலர் இளையராஜாவிடம், வனத்துறையே மீட்பு நடவடிக்கையில் ஈடுபட கோரிக்கை வைத்தார். இதனையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தாலும் வனத்துறையினர் வந்து வன உயிர்களை மீட்டு, வனத்தில் விட நடவடிக்கை எடுக்கபபட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் கூறினார்.

Tags : Kumary , Nagarcoil, Snakes, Forest Department, kanniyakumari
× RELATED வருமானத்திற்கு அதிகமாக சொத்து...