×

இந்தியாவுக்குள் ஊடுருவ 400 பயங்கரவாதிகள் தயாராக இருப்பதாக முப்படை தலைமை தளபதி நரவானே தகவல்

டெல்லி  : இந்தியா எல்லை பகுதியில் ஊடுருவதற்காக 300 முதல் 400 தீவிரவாதிகள் தயாராக உள்ளதாக டெல்லியில் நடைபெற்ற தேசிய ராணுவ தினம் விழாவில் விழாவில் முப்படை தலைமை தளபதி நரவானே தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 144 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக நரவானே தெரிவித்துள்ளார்.

மேலும் எல்லை பகுதியில் சீனா ஏற்படுத்திய பதற்றத்தால் இந்தியா ராணுவத்திற்கு மிக பெரிய சவாலாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இந்திய-சீனா எல்லையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இருதரப்பிலும் 14 சுற்று கமாண்டர் அளவில் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ராணுவ கமாண்டர்கள் அளவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் தற்போது இந்திய-சீனா எல்லையில் சூழ்நிலை தற்போது மேம்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இருதரப்பிலும் சமரச பேச்சுவார்தையால் இருநாட்டு படைகளும் திரும்ப பெறப்பட்டுள்ளதகாவும் கூறியுள்ளார்.

இந்திய ராணுவத்தில் விமானம் ஓட்டும் பைலட்டுகளாக பெண்கள் நியமிக்கப்படுவர்கள் என்றும்  தேசிய பாதுகாப்பு அகாடமி மூலம் இந்த ஆண்டு பெண் அதிகாரிகளுக்கு பைலட் பயிற்சி அளிக்க முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்திய ராணுவத்தில் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முப்படை தலைமை தளபதி நரவானே தெரிவித்தார்.


Tags : Naravane ,Chief Chief Commander ,India , Naravane, Indian Army Day, Indian Army, Women Pilot, Pakisthan,Terror
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...