×

இராணுவ தினத்தையொட்டி டெல்லியில் ராணுவத்தினர் அணிவகுப்பு; இந்திய ராணுவர்கள் மிகவும் தைரியமானவர்கள் என மோடி புகழாரம்

டெல்லி: ராணுவ தினத்தை முன்னிட்டு டெல்லியிலுள்ள தேசிய போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினர். இதனிடையே இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்தியாவின் 74 வது ராணுவத்தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் அமைந்திருக்கும் போர் வீரர்கள் நினைவிடத்தில் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே, விமான படை தளபதி வி. ஆர். சௌத்ரி, கப்பற்படை தளபதி ஆர். ஹரிகுமார் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

ராணுவத்தினத்தை ஒட்டி டெல்லியிலுள்ள ஜெனரல் காரியப்பா மைதானத்தில் நடைபெற்ற ராணுவத்தினரின் அணிவகுப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. இதில் ராணுவத்தினர் கம்பீரமாக நடைபோட்ட காட்சி காண்போரின் கண்களுக்கு விருந்து படைத்தது. இந்த அணிவகுப்பை ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே பார்வையிட்டார். இதனிடையே இந்திய ராணுவத்தின் வீரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் நிறைந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி ராணுவத்தினத்தை ஒட்டி ராணுவத்தினருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்திய ராணுவத்தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருக்கும் பிரதமர், நமது ராணுவத்தினர் மிகுந்த தைரியமாணவர்கள் என்று பாராட்டியுள்ளார். மரியாதைக்குரிய ராணுவத்தினருக்கும், அவர்களது குடும்பத்திற்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் கூறியுள்ளார். இந்திய ராணுவம் துணிச்சலுக்கும், தொழில் நிபுணத்துவத்துக்கும் பெயர் பெற்றது என்று புகழ்ந்துள்ளார். தேசத்தின் பாதுகாப்பிற்க்காக இந்திய ராணுவம் அளித்துள்ள விலைமதிப்பற்ற பங்களிப்பை போற்ற வார்த்தைகள் இல்லை என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.               


Tags : Army ,Delhi ,Army Day ,Modi , Army Day, Delhi, Army Parade, India, Brave, Modi
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...