'பந்துவீச்சாளர் நடராஜன் தான் என் ரோல் மாடல்'ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட தகுதி பெற்ற நெசவுத்தொழிலாளியின் மகன் லோகேஸ்வரன் பேச்சு

நாமக்கல்: இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி தாய் நாட்டிற்காக சாதிப்பதே தனது லட்சியம் என ரஞ்சி கோப்பை போட்டி தொடரில் விளையாட தேர்வாகியுள்ள நாமக்கல் மாவட்ட இளம் வீரர் லோகேஸ்வரன் சூளுரைக்கிறார். நாமக்கல் மாவட்டம் பாய்ச்சல் வட்டம் கடந்தப்பட்டி மேட்டு தெருவைச் சேர்ந்த கைத்தறி நெசவாளரின் மகனான லோகேஸ்வரன் தற்போது தமிழ்நாடு அணி சார்பில் ரஞ்சி கோப்பையில் விளையாட தேர்வாகியிருக்கிறார். துரைசாமி- சாந்தி தம்பதியின் 3- வது மகனான லோகேஸ்வரன், ராசிபுரம் அருகேயுள்ள ஒரு தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்சீனியரிங் படிப்பில் இறுதியாண்டு படித்து வருகிறார்.

இடது கை பேட்ஸ்மேன் ஆகவும், வலது கை பந்துவீச்சாளராகவும் உள்ள இவர் இந்திய அணியில் தேர்வாவதே தனது லட்சியம் என்று கூறுகிறார். ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டயா ஆகியோரின் ஆட்டத்தால் கவரப்பட்ட லோகேஸ்வரன் சேலம் வீரர் நடராஜனை முன்னுதாரணமாக கொண்டு விளையாடி வருகிறார். கோவையில் நடந்த cpl போட்டியில் சாதித்துள்ளார்; கார்ப்பரேட் பிரீமியம் லீக் போட்டிக்கு தகுதி பெற்று சிறப்பாக விளையாடினார். அதை தொடர்ந்து மும்பை மெட் கிளப்பில் விளையாடிய லோகேஸ்வரன் ரஞ்சி கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளார். வசதியற்ற குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து ரூ.45,000 கொடுத்து உதவியுள்ளனர்.          

Related Stories: