×

கொரோனா கழிவுகளை அழிக்க புது திட்டம்

பெங்களூரு: உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று 3வது அலை பரவலை தடுக்க ஒவ்வொரு துறையும் தங்கள் பங்களிப்பு கொடுத்து வருகிறது. கூட்டு முயற்சியால் மட்டுமே கொரோனாவை முழுமையாக ஒழிக்க முடியும் என்பதில் அனைவரும் உறுதியாக உள்ளனர். அந்த வகையில் கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், வைரஸ் அறிகுறி காரணமாக மருத்துவமனை மற்றும் வீடுகளில் தங்க வைத்து கண்காணித்து வருவோருக்கு பயன்படுத்தும் மருத்துவ கழிவு பொருட்களை சேமித்து அழிக்க புதிய திட்டம் செயல்படுத்தி வருகிறது.

மாநிலத்தில் இயங்கி வரும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மூலம் நாள் ஒன்றுக்கு 67 ஆயிரத்து 339 கிலோ மருத்துவ கழிவுகள் கிடைக்கிறது. அதை சேமித்து அகற்றுவதற்கான பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் கர்நாடக மாநில மாசு காட்டுப்பாட்டு வாரியம் ஒப்படைத்துள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பயன்படுத்தும் பொருட்களை சாதாரண மருத்துவ கழிவுகளுடன் இணைத்து அழிக்க முடியாது. அதை மிகவும் பாதுகாப்பாக சேமித்து அழிக்க வேண்டியது அவசியம்.கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு வழங்கப்படும் ஊசி, மருந்து பொருட்கள், மாஸ்க், ஆடை, குளுகோஸ் வேஸ்ட், டாக்டர், நர்சுகள், பரிசோதகர்கள் பயன்படுத்தும் சீருடைகள் உள்பட மருத்துவ கழிவுகளை சேமித்த 48 மணி நேரத்தில் அழிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

இதை செயல்படுத்தும் வகையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் முக்கிய முடிவுகள் எடுத்துள்ளது. கொரோனா மருத்துவ கழிவுகளை எந்தெந்த தொழில்நுட்பம் பயன்படுத்தி அழிக்க வேண்டும் என்பதற்காக ஐந்து முக்கிய வழிமுறைகள் வகுத்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் உள்ள வார்டுகளில் மருத்துவ கழிவுகள் சேமிக்க பிளாஸ்டிக் பேக் மற்றும் கழிவு தொட்டி அமைக்க வேண்டும், பேக் மற்றும் கழிவு தொட்டி மீது கொரோனா என்று லேபல் ஒட்ட வேண்டும். இந்த கழிவுகளை எடுத்து செல்லும் வாகனங்களுக்கு சோடியம் ஐபோகுளேரைட் ரசாயம் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. கொரோனா நோயாளிகள் தங்கி உள்ள மருத்துவமனைகள் மட்டுமில்லாமல், அவர்களின் ரத்தம் மற்றும் சளி ஆகியவற்றை பரிசோதனை செய்யும்.


Tags : Corona , Corona Waste, New Project, Karnataka State Pollution Control Board
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...