டெல்லி காஸிபூர் மலர்சந்தையில் ஆபத்தான வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

டெல்லி: டெல்லி காஸிபூர் மலர்சந்தையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. பை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டை காவல்துறையினர் வெடிக்கச் செய்தனர். வெடிகுண்டு வைத்தவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் உள்ள மிகப்பெரிய மலர் சந்தையான காஸிபூர் மலர்சந்தையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் காவல்துறையினர் உடனடியாக காஸிபூர் மலர்சந்தையில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மிகவும் ஆபத்தான வெடிகுண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் துணையுடன் கிடைத்த வெடிகுண்டுகளை ஆழமான குழியினை தோண்டி வெடிகுண்டுகளை புதைத்து அதனை செயலிழக்க செய்தனர். வெடிகுண்டு வைத்தவர் யார் என்பது குறித்து போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் அப்பகுதியில் இருந்த பொதுமக்களை வெளியேற்றி அந்த இடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

Related Stories: