×

அமித்ஷாவை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

சென்னை: நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவை புறக்கணித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செயலைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழ்நாட்டு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில பொருளாளர் என்.சுந்தராஜ் தலைமை தாங்கினார். கட்சியின் தலைவர் பொன்குமார் பேசுகையில், ‘‘ தமிழக எம்.பி. குழுவை அமித்ஷாவை சந்திப்பதற்கு  முயற்சித்தும், அவர் நேரம் ஒதுக்கி தமிழக பாராளுமன்ற குழுவை  சந்திக்கவில்லை.

இது 8 கோடி தமிழ்மக்களை ஒட்டுமொத்தமாக அவமதிக்க கூடிய  செயலாகும். ஒன்றிய அமைச்சரின் இந்த செயல் ஆணவத்தின் உச்சமாகும். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து  மக்கள் பிரச்னைக்காக ஒன்றிய அரசை அணுகிய பொழுது அந்த குழுவை  புறக்கணித்து இருப்பது ஜனநாயக மாண்பை குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும்” என்றார்.


Tags : Chennai ,Amitshah , Amitsha, Chennai, Demonstration
× RELATED வாய்ப்பு கேட்ட விஜயதரணி காத்திருக்க சொன்ன அமித்ஷா