கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்: ஓபிஎஸ், இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை, ஜன. 14: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை:

தமிழக சுகாதார துறை அமைச்சர் அறிக்கையில் ஒமிக்ரான் நோய் தொற்று பாதிப்பை உறுதி செய்யும் ஆய்வக வசதி மத்திய அரசிடம்தான் உள்ளது.எனவே, தற்போது ஒமிக்ரான் பரிசோதனையை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார். எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒமிக்ரான் பரிசோதனை மையங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். நோய் தொற்றால் ஏற்படும் உண்மையான பாதிப்புகளை மறைக்காமல், மக்களிடம் உள்ளது உள்ளபடியே தெரிவிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: