சிட்னி டென்னிஸ் கிளாசிக் அரைஇறுதியில் கசட்கினா

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சிட்னி டென்னிஸ் கிளாசிக் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, ரஷ்ய வீராங்கனை டாரியா கசட்கினா தகுதி பெற்றார். காலிறுதியில் ஸ்பெயினின் கார்பினி முகுருசாவுடன் (2வது நிலை) நேற்று மோதிய கசட்கினா 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 26 நிமிடத்துக்கு நீடித்தது.

மற்றொரு காலிறுதியில் சுவிஸ் நட்சத்திரம் பெலிண்டா பென்சிக்குடன் மோதிய ஸ்பெயினின் பவுளா படோசா 7-6 (8-6), 3-6, 6-3 என்ற செட் கணக்கில் 2 மணி, 35 நிமிடம் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். பார்போரா கிரெஜ்சிகோவா (செக்.), அனெட் கோன்டவெய்ட் (எஸ்டோனியா) ஆகியோரும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related Stories: