சாய்னா குறித்து ஆபாச பதிவு: நடிகர் சித்தார்த் மீது ஐதராபாத் போலீஸ் வழக்கு

ஐதராபாத்:  பிரதமர் மோடிக்கு பஞ்சாப்பில் நடந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து பேட்மிண்டன் வீராங்கனைசாய்னா நேவால் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.  சாய்னாவின் இந்தப் பதிவை டேக் செய்து நடிகர் சித்தார்த், ஆபாசமான வார்த்தைகளால் பதிவுகளை வெளியிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், தேசிய மகளிர் ஆணையமும் சித்தார்த்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.   

இதற்கிடையே தனது பதிவு குறித்து சாய்னாவிடம் சித்தார்த் மன்னிப்பு கேட்டார்.    இந்நிலையில், ஆபாச பதிவை வெளியிட்ட நடிகர் சித்தார்த் மீது தெலங்கானா மாநிலம் ஐதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.   இதுகுறித்து கூடுதல் டிஜிபி கேவிஎம் பிரசாத் கூறுகையில், ‘நடிகர் சித்தார்த் மீது ஐதராபாத் சைபர் க்ரைம் போலீசார் ஐபிசி் பிரிவு 509 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிந்துள்ளனர். சித்தார்த்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: