மதுராந்தகம் அருகே வெள்ளப்புத்தூர் ஏரி மதகு உடைந்து வீணாகும் நீர்; விவசாயிகள் வேதனை

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வெள்ளபுத்தூர்  கிராமத்தில்  சித்தேரி, பெரிய ஏரி என்று இரண்டு  ஏரிகள் உள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெரிய ஏரி மதகு உடைப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறிக்கொண்டிருக்கிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்ைக எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த ஏரியை நம்பி பாசன வசதி பெறும் 350 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஏரி மதகு உடைப்பை சரிசெய்யவேண்டும் என்று பொதுப்பணித்துறைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தகவல் கொடுத்துவிட்டோம். இதுவரை யாரும் வரவில்லை. இதனால் 100 நாள் பணி செய்யும் மக்கள் தானாக முன்வந்து மதகின் பழுதை சரிசெய்யும் பணியில் கிராம மக்களுடன் சேர்ந்து ஈடுபட்டுள்ளனர். அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று விவசாயிகளும் பொதுமக்களும் கூறுகின்றனர்.

Related Stories: