×

கோவையில் இறந்த இலங்கை தாதாவின் துப்பாக்கி பறிமுதல்: போதை கும்பல் குறித்து விசாரணை

கோவை: கோவையில் இறந்த இலங்கை தாதாவின் துப்பாக்கி சிவகங்கையில் இருந்து கண்டறியப்பட்டது. இலங்கையை சேர்ந்தவர் அங்கோட லொக்கா (37). போதை பொருட்கள் கடத்தல் மற்றும் நிழல் உலக தாதாவாக இருந்தவர். இவர் மீது போதை பொருட்கள் விற்பனை, கொலை வழக்குகள் ஏராளமாக உள்ளது. கடந்த 2020ல் இவர் கோவை வந்தார். சேரன் மாநகரில் தனது காதலி அமானி தாஞ்சி (25) என்பவருடன் வசித்து வந்தார். கடந்த 2020 ஜூலை மாதம் மர்மமான முறையில் இவர் இறந்தார். பின்னர், இவரது சடலம் மதுரையில் எரியூட்டப்பட்டது.

இந்த வழக்கில் அமானி தாஞ்சி மற்றும் அவருக்கு துணையாக இருந்த வழக்கறிஞர் சிவகாம சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அங்கோட லொக்காவின் முக்கிய கூட்டாளி லடியா என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு கூட்டாளியான சனுக்கா தனநாயகா (38) பெங்களூரில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அங்கோட லொக்கா வைத்திருந்த வெளிநாட்டு கைத்துப்பாக்கி காணாமல் போய் விட்டதாக தகவல் வெளியானது. அதை சி.பி.சி.ஐ.டி போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், சிவகங்கையில் சிவகாமசுந்தரிக்கு சொந்தமான இடத்தில் கைத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் இந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கோட லொக்காவின் கூட்டாளி லடியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சபேசன் என்பவரிடம் என்.ஐ.ஏ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கேரளாவில் 300 கிலோ ஹெராயின் போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைதானவர்.  இவர்களின் பின்னணி தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Coimbatore , Gun seizure of Sri Lankan donor who died in Coimbatore: Investigation into drug gang
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...