கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம்: அமைச்சர் ஆவடி நாசர் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பகுதியில் உள்ள எம்.வி.பேரடைஸில் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கி.வே.ஆனந்தகுமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஷ்வரி, மாநில மாணவரணி அமைப்பாளர் ஜெரால்டு, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.முர்த்தி, ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், சுப்பிரமணி, அபிராமி குமரவேலு, பொறுப்பு குழு உறுப்பினர்கள் பகலவன், வெங்கடாசலபதி, ரவி, கதிரவன், கோதண்டம், அன்புவாணன், மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், சாரதம்மா முத்துசாமி, கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம், பேரூர் செயலாளர் அறிவழகன், ஒன்றிய நிர்வாகிகள் வேதாச்சலம், பாஸ்கரன், சுக, கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் காளத்தி, இஸ்மாயில் ஒன்றிய கவுன்சிலர்கள் அமலா சரவணன், ஜோதி, ஹரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திமு உயர் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் சுண்ணாம்புகுளம் பரிமளம், கிருஷ்ணாமுர்த்தி, பொன்னேரி அரசு வழக்கறிஞர்கள் பல்லவன், தேவேந்திரன், இலக்கிய அணி பொருளாளர் ஜோதிலிங்கம், திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் ஒன்றிய துணை செயலாளர் கே.ஈ.திருமலை நன்றியுரை கூறினார்.

Related Stories: