பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் அர்ச்சகர், ஊழியர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடை: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடை ஆகியவற்றை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார். பெரியபாளையம் ஊராட்சியில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும்  பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செயல் அலுவலர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, சம்பத், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர்கள் சுனில், விஜயலட்சுமி, மேலாளர் வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு கோயிலில் பணியாற்றும் அர்ச்கர்கள், ஊழியர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடைகளை வழங்கினார்.

6 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ  கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள ஒவ்வொரு கிளைக்கும் 6 திமுகவினர் என 6 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்க ஏற்பாடு செய்தார். அதன்படி பெருவாயலில் உள்ள திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள திமுக கிளை கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு தொகையை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ  வழங்கினார். அப்போது, அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதில் திமுக கிளை கழக நிர்வாகி ஆண்களுக்கு வேட்டி சட்டையும், பெண்களுக்கு புடவை மற்றும் காலண்டர்கள் ஆகியவற்றையும் வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.முர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் மு.மணிபாலன், கி.வே.ஆனந்தகுமார், சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், நகர செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: