பொன்னேரி பேரூர் திமுக பொறுப்பாளர் நியமனம்

பொன்னேரி: பொன்னேரி பேரூர் கழக திமுக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் பொன்னேரி பேரூர் கழக திமுக பொறுப்பாளராக டி.வி.இளங்கோவனை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமனம் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து, பொன்னேரியில் நியமனம் செய்யப்பட்ட டி.வி.இளங்கோவனை திமுக நிர்வாகிகள், முன்னோடிகள், இளைஞரணியினர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Related Stories: