திருவள்ளூரில் ரூ.385 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானம், முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு இடையே அரசு மருத்துவக் கல்லூரி கட்ட ₹385 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து திருவள்ளூரில் மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு எதிரே ₹185 கோடி செலவில் அரசு மருத்துவக் கல்லூரியும், திருவள்ளூர் ஜெ.என். சாலையில் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதலாக நவீன வசதிகளுடன் ₹190 கோடியில் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

இதை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நடந்து முடிந்தது. இந்த கல்லூரி 22 ஏக்கர் பரப்பளவு கொண்ட மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நவீன வசதியுடன் செய்முறை பயிற்சிகளுடன் கூடிய வகுப்பறை வளாகம், மருத்துவ பயிற்றுநர்கள் வளாகம், கலையரங்கம், உணவுக் கூடம், உடற்பயிற்சி கூடம், நிர்வாக அலுவலகம், மருத்துவ மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள், வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகம், பொதுப்பணித் துறை அலுவலக பிரிவு, கணிப்பொறி வசதியுடன் கூடிய 4 ஆயிரம் நூல்கள் கொண்ட நூலகம், பணியாளர்கள் குடியிருப்பு வளாகம், பூங்கா உள்பட பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன. இக்கல்லூரி வளாக அரங்கத்தில் மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் விழா நடந்தது. இக்கல்லூரி வளாகத்தை புதுடெல்லியிலிருந்து பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதையடுத்து கல்லூரி வளாகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், கே.ஜெயக்குமார் எம்பி, வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், பிஎஸ்டி இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவன நிர்வாக இயக்குனர் டாக்டர் பிஎஸ்டி.வி.எஸ்.தென்னரசு ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

விழாவில் எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சுதர்சனம், எஸ்.சந்திரன், காரம்பாக்கம் க.கணபதி, துரைசந்திரசேகர், எஸ்பிவருண்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி,  கல்லூரி முதல்வர் அரசி வத்சன், திமுக மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கேவிஜி.உமா மகேஸ்வரி, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஏ.ஜி.சிதம்பரம், திருவேற்காடு ரமேஷ், நிர்வாகிகள் விக்டரி மோகன்,  எஸ்.பவன்குமார், விக்டரி ஜெயகுமார், சதா.பாஸ்கரன், வேப்பம்பட்டு அன்பழகன், கிளாம்பாக்கம் சிவகுமார், ஜோஷி பிரேமானந்த், வக்கீல் சுரேஷ்பாபு, கும்மிடிப்பூண்டி எம்.சம்பத், ஏ.மதன்மோகன், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ஆர்.சசிகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.திவாகர், நகர தலைவர் வழக்கறிஞர் வி.இ.ஜான், வழக்கறிஞர் ஒய்.அஸ்வின்குமார், டி.தீனதயாளன், பேரம்பாக்கம் எஸ்.திவாகர், கதிர்வேடு பி.ராஜன் பர்னபாஸ். வெங்கல் டி.சிவசங்கர், செல்வம் மீரான், திமுக நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், டி.ஆர்.திலீபன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: