×

சமூக வலைதளங்களில் மத உணர்வை தூண்டி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய 8 பேர் மீது வழக்கு பதிவு

ஸ்ரீபெரும்புதூர், ஜன. 13: ஸ்ரீபெரும்புதூர் அருகே வரதராஜபுரம் அடையாறு கால்வாய் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து நரசிம்ம ஆஞ்சநேயர் கோயில் கட்டப்பட்டு இருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமித்து கட்டிய ஆஞ்சநேயர் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் அதிகாரிகள் இடித்து தள்ளினர்.

அப்போது, அப்பகுதியை சேர்ந்த சிலர், எதிர்ப்பு தெரிவித்து பணி செய்யவிடாமல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மணிமங்கலம் போலீசார், 8க்கும்  மேற்பட்டோரை கைது செய்து, மாலையில் விடுவித்தனர். ஆனால் அவர்கள்,  கோயில் இடிக்கப்பட்ட சம்பவத்தை செல்போனில் வீடியே எடுத்த சிலர், சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இந்நிலையில், ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த கோயிலை அகற்றியதை, வீடியோ எடுத்து, மத  உணர்வை தூண்டி, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வருவதாக குன்றத்தூர் தாசில்தார் பிரியா, மணிமங்கலம் போலீசில் புகார்  அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, 8 பேரை கண்டறிந்து அவர்கள், மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags : Case registered against 8 persons for inciting religious sentiment on social networking sites and defaming the state
× RELATED மதுரை கோயில் செங்கோல் உத்தரவை ரத்து...