கற்பக விநாயகா கல்லூரி பன்னாட்டு நிறுவனத்துடன் வேலை வாய்ப்பு, பயிற்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே சின்ன கொளம்பாக்கத்தில் உள்ள கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கும், பன்னாட்டு தனியார் நிறுவனத்துக்கும் இடையே கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. கல்லூரி சார்பில் கல்லூரி இயக்குனர் முனைவர் மீனாட்சி அண்ணாமலை, தனியார் நிறுவன மனிதவள மேம்பாட்டு துறை தலைவர் ஒப்பில்லான் மற்றும்  நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அலுவலர் ஜேம்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் காசிநாதன் பாண்டியன், கல்லூரி முனைவர் சுப்பாராஜ், கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தலைவர் மணிமாறன் உள்பட கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, தனியார் நிறுவனம் சார்பில் னைத்து துறை பொறியியல் மாணவர்களுக்கும் அந்நிறுவனம் சார்பில் நடத்தப்படும் பயிற்சி வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கமாகவும், விரிவாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

Related Stories: