×

கைதான 6 பேரிடம் விசாரணையில் அதிர்ச்சி தகவல்; மனைவிகளை கைமாற்றும் விவகாரம்; மேலும் 20 குழுக்களுக்கு தொடர்பு: விசாரணையை தீவிரப்படுத்த மகளிர் ஆணையம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில்  மனைவிகளை கைமாற்றும் சம்பவத்தில் மேலும் 20 குழுக்கள் உள்ளதாக அதிர்ச்சி  தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த போலீசுக்கு கேரள  மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் மனைவிகளை கைமாற்றும்  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கோட்டயம்,  கருகச்சால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த  விசாரணையில் நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள்  வெளியாகி வருகின்றன.

இந்த வழக்கில் புகார் கொடுத்த இளம் பெண்,  குழுவில் உறுப்பினராக உள்ள கணவரின் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளார்.  இதுதொடர்பாக இளம் பெண்ணின் சகோதரர் கோட்டயம் மாவட்ட எஸ்பியிடம்  புகார் அளித்தார். அதில், இந்த குழுவை சேர்ந்த 8 பேர் தனது தங்கையை  பலாத்காரம் செய்ததாகவும், இயற்கைக்கு மாறாக உறவு கொண்டதாகவும் குறிப்பிட்டு  உள்ளார்.

இதற்கிடையே, கைதான இளம் பெண்ணின் கணவர் உள்பட 6 பேரையும்  போலீசார் நேற்று முன்தினம் கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  தொடர்ந்து இளம் பெண்ணின் கணவர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு  பாலின உணர்ச்சியை தூண்டும் ஊக்க மருந்துகளை கைப்பற்றினர்.

இதற்கிடையே, போலீஸ் நடத்திய தீவிர விசாரணையில், கேரளா முழுவதும் இதுபோன்று  மனைவிகளை கைமாற்றும் இந்த கேவலமான செயலில், 20க்கும் மேற்பட்ட குழுக்கள் செயல்பட்டு வருவது  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் அனைத்திலும் புகார் அளித்த  இளம் பெண்ணின் கணவர் உறுப்பினராக இருந்து வருகிறார்.

இந்த குழு  ‘‘கப்பிள் ஸ்வாப்பிங்’’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. இது தவிர ‘‘கோட்டயம்  ஸ்விங்கர்ஸ், மல்லு கப்பிள்’’ என்ற பெயர்களும் உள்ளன. இந்த குழுக்களில் கேரளா  முழுவதும் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினராக உள்ளனர். டெலகிராம், வாட்ஸ் அப்  மூலம் தகவல்கள் போட்டோக்கள், வீடியோக்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஒருவருக்கொருவர்  நன்கு அறிமுகமான பிறகு தன்னுடைய ஆபாச பேச்சையும், புகைப்படங்களையும் சமூக  வலைதளங்களில் பகிர்ந்து வந்து உள்ளனர். இவற்றை அவர்களுக்கு தெரியாமலேயே  குழுக்களை சேர்ந்த சிலர் பதிவு செய்து உள்ளனர். பின்னர், அதையும் பலருக்கு  விற்று காசாக்கி உள்ளனர்.

தற்போது போலீசார் விசாரணையை  தீவிரப்படுத்தியதை தொடர்ந்து, பல குழுக்களில்  இருந்து ஏராளமானோர் விலகி  செல்ல ஆரம்பித்து உள்ளனர். ஆனாலும் போலீசார் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன்  குழுக்களில் இடம் பெற்றிருந்தவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து  வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த போலீசுக்கு, கேரள  மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மனைவியை விருந்தாக்கிய கணவன்: தற்போது  புகார் கொடுத்த இளம் பெண்,  கடந்த 2 வருடங்களுக்கு முன்பே இது தொடர்பாக  கோட்டயம், கருகச்சால்  போலீசில் புகார் செய்துள்ளார். உடனே, இளம் பெண்ணின்  கணவரை ஸ்டேஷனுக்கு  அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, இதுபோன்ற  காரியங்களை எந்த கணவராவது செய்வாரா? என்று கேட்டுள்ளனர். அதற்கு நான்  தமாசுக்காக தான் மனைவியிடம் கூறினேன் என்று  போலீசாரிடம் கூறியுள்ளார்.  இதையடுத்து, போலீசார் அதை பெரிதாக எடுத்து  கொள்ளவில்லை. அதன் பிறகுதான்  மனைவியை மிரட்டி இந்த குழுவில் இணைய வைத்துள்ளார். குழுவில் உள்ள  மற்றவர்களுக்கும் மனைவியை விருந்தாக்கி உள்ளார்.

Tags : Women's Commission , Shocking information at trial of 6 arrested; Affair of handing over wives; Contact 20 more groups: Women's Commission ordered to intensify investigation
× RELATED பெண்களுக்கு எதிரான குற்றம்...