ஊரடங்கு காரணமாக தேசிய திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: அரசு தேர்வுகள் இயக்ககம் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வரும் 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த தேசிய திறனாய்வுத் தேர்வு, ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு காரணமாக வரும் 29ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை சம்மந்தப்பட்ட பள்ளியின் முதல்வர், தலைமை ஆசிரியர்கள்  www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 19ம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி, பாஸ்வேர்ட் மூலம் ஹால்டிக்கெட் பெறலாம்.

Related Stories: