ஐகோர்ட் அலுவலக தூய்மைப்பணிக்கு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: மாநில அரசு உரிமையியல் வழக்கறிஞர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, ஐகோர்ட் வளாகத்தில் உள்ள சட்ட அலுவலர்களின் கட்டிடத்தில்,  மாநில அரசு உரிமையியல் வழக்கறிஞர் அலுவலகம், மாநில அரசு குற்றவியல் அலுவலகம், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகங்கள் உட்பட பல சட்ட அலுவலர்களின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த கட்டிடம் முழுமைக்கும் தூய்மைப்பணி மேற்கொள்ள தகுதிவாய்ந்த முன் அனுபவம் உள்ள தூய்மைப்பணி மேற்கொள்ளும் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கட்டிடத்தை பார்வையிட 21ம் தேதி வரை விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பிப். 4ம் தேதி மாலை 5.45 மணிக்குள் முத்திரையிடப்பட்ட விண்ணப்பங்கள் ‘மாநில அரசு உரிமையியல் வழக்கறிஞர், சட்ட அலுவலர்கள் கட்டிடம், உயர்நீதிமன்றம், சென்னை-600104’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Related Stories: