திருவிக நகர் தொகுதி திமுக நிர்வாகிகளுக்கு வேட்டி சேலை

பெரம்பூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுக்கு வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை பட்டாளம் பகுதியிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் நடந்தது. திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கலந்துகொண்டார். அப்போது நிர்வாகிகள் அனைவருக்கும் அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் சுமார் 1100 நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Related Stories: