பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப் படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வரும் 14ம் தேதி (நாளை) மற்றும் 15 ஆகிய தேதிகளில், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி-சூலூர்ப்பேட்டை ஆகிய பிரிவுகளில் மின்சார ரயில் மற்றும் பறக்கும் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: