ஆர்ஆர்ஆர் படத்துக்காக 7 நாட்கள் நடிக்க அஜய் தேவ்கனுக்கு ரூ.35 கோடி

சென்னை: ஆர்ஆர்ஆர் படத்தில் வெறும் 7 நாட்கள் நடிக்க ரூ.35 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன். ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆர்ஆர்ஆர். இதில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கிறார்கள். கவுரவ வேடத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். இந்த படத்தில் வெறும் ஏழு நாட்கள் மட்டுமே அஜய் தேவ்கன் நடித்தாராம். பாலிவுட்டில் ரூ.100 கோடி வரை சம்பளம் வாங்கும் அவர், இந்த படத்தில் ஏழு நாட்களுக்கு ரூ.35 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார். இதேபோல் அலியா பட்டுக்கும் இதில் சிறு வேடமாம். படத்தில் மொத்தமே 20 நிமிடங்கள்தான் அவரது காட்சிகள் வருமாம். அவருக்கு ரூ.9 கோடி சம்பளமாக தரப்பட்டுள்ளது.

Related Stories: