விசேஷ நாட்களில் ஆவண பதிவு செய்ய அனுமதி: தமிழக அரசு உத்தரவு

சென்னை: வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டுள்ள உத்தரவு: பதிவுத்துறையின் வருவாயை பெருக்கும் நோக்கில், சித்திரை முதல் தேதி (14.4.2021), ஆடிப்பெருக்கு (3.8.2021) மற்றும் தைப்பூசம் (18.1.2022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்து பதிவினை மேற்கொள்ளவும் மற்றும் அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆவண பதிவினை ஏற்பதற்கு ஏதுவாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து பதிவு அலுவலகங்களும் அன்றைய தினத்தில் வழக்கம்போல் காலை 10 மணி முதல் ஆவண பதிவு முடியும் வரை செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிடும் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க வேண்டும். மேலும் அன்றைய தினம், ஸ்டார் 2.0 திட்டப்படி அனைத்து அலுவலகங்களிலும் பதிவுப் பணி ஏதுவாக பொதுமக்களுக்கு முன் பதிவு இணையவழி தடையின்றி நடைபெற வசதி மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்களுக்கான ஹெல்ப் டெஸ்க் மற்றும் ஹெல்ப் லைன் வசதி ஆகியவற்றினை எவ்வித குறைபாட்டுக்கும் இடமின்றி உடன் ஏற்படுத்திட டிசிஎஸ் மென்பொறியாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். துணை பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுவதை கண்காணிக்கவும் கோரப்படுகிறார்.

Related Stories: