×

பெங்களூரில் வேகமெடுக்கும் கொரோனா: ஒரே நாளில் 15,617 பேர் பாதிப்பு; கர்நாடகாவில் 24 மணி நேரத்தில் 21,390 பேர் பாதிப்பு

கர்நாடகா: கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 21,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 14,473 பேருக்கு கர்நாடகாவில் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது 21 ஆயிரம் பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் மட்டும் 15,617 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 10,800 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 10 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,541 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 93,009 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெங்களூருவில் பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பெங்களுருவில் மட்டும் 15,617 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருவதால் சுகாதாரத்துறை மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா முதல்வர் உள்பட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ளனர்.


Tags : Corona ,Bangalore ,Karnatakah , In Bangalore, Corona, 15,617 people, were affected
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...