தஞ்சை மணிக்கூண்டில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை திருக்குறள் ஒலிக்கும்: மாநகராட்சி ஆணையருக்கு பொதுமக்கள் பாராட்டு

தஞ்சை: தஞ்சை மணிக்கூண்டில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை திருக்குறள் ஒலிக்கும்படி செய்துள்ள மாநகராட்சி ஆணையரின் புதிய முயற்சியை பொதுமக்கள் வரவேற்றனர். 1883ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த மணிக்கூண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட மணிக்கூண்டில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் ஒரு புதுமையை புகுத்தியுள்ளார். ஒவ்வொரு மணி நேரமும் இசைக்கும் மணிக்கூண்டு நேரத்தில் இசைத்தபிறகு சில வினாடிகளில் திருக்குறள் இசைக்கும் படி செய்துள்ளார். உலக பொதுமறையான திருக்குறள் ஒவ்வொரு மணி நேரமும் இசைப்படுவது தஞ்சை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: