சென்னையில் போகி பண்டிகையையொட்டி நெகிழி, டயர்களை எரித்தால் ரூ.1000 அபராதம்: மாநகராட்சி நிர்வாகம்

சென்னை: சென்னையில் போகி பண்டிகையையொட்டி நெகிழி, டயர்களை எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. போகியன்று விதிமுறைகளை மீறி டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் எரிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி அவ்வாறு எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மண்டலங்களிலும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் 15 மண்டலங்களுக்கும் சென்னை மாநகராட்சி சார்பாக இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக தொடர்ந்து இந்த அறிவிப்பு இருக்கும். ஆனால் இந்த முறை அபராதத்துடன் எச்சரிக்கை கொடுக்கக்கூடிய வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விதிகளை மீறி நெகிழி பொருட்கள் எரிக்கப்படுகிறதா என அனைத்து மண்டலங்களிலும் கண்காணிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: