இந்தியாவிலேயே ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவது தமிழகத்தில் தான்: பிரதமர் நரேந்திர மோடி உரை..!!

சென்னை: இந்தியாவிலேயே ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவது தமிழகத்தில் தான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். தை பிறந்தால் வழி பிறக்கும் என தமிழில் பேசி தனது உரையை பிரதமர் தொடங்கினார். அப்போது பேசிய அவர், எனது சாதனையை நானே மிஞ்சும் வகையில் தமிழ்நாட்டில் 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்துள்ளேன். இந்தியாவில் இன்று மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. நீண்ட காலமாக தேவையான மருத்துவர்களை உருவாக்க கவனம் செலுத்தப்படவில்லை. 2014ல் நாடு முழுவதும் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையை 596 ஆக அதிகரித்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.

Related Stories: