புரோ கபடி லீக்கில் இன்று அரியானா-உபி.யோத்தா டெல்லி-பெங்களூரு மோதல்

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 47வது லீக் போட்டியில் பாட்னா-யு மும்பா அணிகள் மோதின. இதில் 43-23 என்ற புள்ளி கணக்கில் பாட்னா வென்றது. 8  போட்டியில் 6 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டை என 34 புள்ளியுடன் பாட்னா முதல் இடத்தில் உள்ளது.  மற்றொரு போட்டியில், குஜராத்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் 40-22 என குஜராத் 2வது வெற்றியை பெற்றது. இன்று இரவு 7.30 மணிக்கு அரியானா-உ.பி.யோத்தா, இரவு 8.30மணிக்கு தபாங் டெல்லி-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

Related Stories: