தமிழக காவல்துறையில் 2021ம் ஆண்டு காலியிடங்கள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்?: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை

சென்னை: தமிழக காவல்துறையில் 2021ம் ஆண்டு காலியிடங்கள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. 2020ம் ஆண்டு 11,181 பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது. காவல் ஆணையம், மாநில பாதுகாப்பு கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தமிழக அரசு பதிலளித்திருக்கிறது.

Related Stories: