சென்னை மதுரவாயலில் லாரி மோதி பெற்றோர் கண் முன்னே 2 குழந்தைகள் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை மதுரவாயலில் லாரி மோதி பெற்றோர் கண் முன்னே 2 குழந்தைகள் உயிரிழந்தன. செல்வம் என்பவர் தனது மனைவி சுமலதா, இரு மகன்கள் ஆதிரன் (4), கவுஷிக் (2) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சாலையில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் முன்னே சென்ற வாகனத்தின் மீது மோதியது. 4 பேரும் கீழே விழுந்த நிலையில் பின்னல் வந்த லாரி ஏறியதில் குழந்தைகள் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

Related Stories: