உத்தராகண்ட்டின் ஹரித்துவாரில் மத மோதலை தூண்டும் வகையில் பேசியது பற்றி உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!!

டெல்லி: உத்தராகண்ட்டின் ஹரித்துவாரில் மத மோதலை தூண்டும் வகையில் பேசியது பற்றி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது. இந்து துறவிகள் மாநாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியது பற்றி பதில் தர அரசுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. வெறுப்பு பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மூத்த வழக்கறிஞர் அஞ்சனா பிரகாஷ், குர்பான் அலி மனுதாக்கல் செய்திருந்தனர். மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி அமர்வு விசாரித்து அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories: