உ.பி. தேர்தலில் சமாஜ்வாதியுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி: அக்கட்சியின் தலைவர் சரத்பவார் அறிவிப்பு

லக்னோ: உத்திரப்பிரதேசம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த தகவலை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்திருக்கிறார்.  உத்திரப்பிரதேசத்தில் மேலும் 13 பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாகவும் சரத்பவார் தெரிவித்திருக்கிறார். உத்திரப்பிரதேசத்தை தொடர்ந்து கோவாவில் வலுவான அணி அமைக்க முயற்சி செய்து வருவதாகவும் பவார் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் காங்கிரசும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ள நிலையில் உத்திரப்பிரதேசத்தில் எதிரெதிர் அணியில் இவை களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் உத்திரப்பிரதேசத்தில் அமைச்சர் சுவாமி பிரசாத் மௌரியா பதவி விலகியிருக்கும் நிலையில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து அக்கட்சியின் உயர்மட்ட குழு விவாதித்துள்ளது.      

Related Stories: