×

திண்டுக்கல்- பாலக்காடு இடையே தண்டவாள உறுதி தன்மையறிய சிறப்பு ரயிலில் சோதனை ஓட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இருந்து பாலக்காடு வரை ரயில் தண்டவாள உறுதித்தன்மையை அறிய சிறப்பு ரயில் மூலம் சோதனை நடந்தது. தெற்கு ரயில்வே சார்பில் அனைத்து பகுதிகளிலும் பயன்பாட்டில் உள்ள ரயில்வே தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்து மாதந்தோறும் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து பாலக்காடு ரயில் நிலையம் வரை உள்ள ரயில் தண்டவாளத்தில் உறுதித்தன்மை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

தெற்கு ரயில்வே மதுரை கோட்ட உதவி பொறியாளர் மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் சிறப்பு ரயிலில் காலை 9 மணிக்கு ஆய்வு பணியை துவங்கினர். இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயிலை, தண்டவாளத்தில் 110 கிலோ மீட்டருக்கும் கூடுதலான வேகத்தில் இயக்கி சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது ரயில் தண்டவாளத்தில் உள்ள அதிர்வுகள் தானியங்கி கணினி மூலம் பதிவு செய்யப்பட்டது. தண்டவாளங்களில் ஏதாவது உறுதித்தன்மையில் குறைபாடு இருந்தால் அதை பராமரிப்பு செய்து மாற்றி அமைக்க இதுபோன்ற சோதனை நடத்தப்பட்டதாக ரயில்வேத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Dindugkal ,Palakkadu , Dindigul-Palakkad, Rail Stability, Special Train, Test Run
× RELATED பாலக்காடு அருகே சுருளி கொம்பன் யானை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்