×

உதகையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் 380 சவரன் அசல் நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து 98 லட்சம் ரூபாய் மோசடி: 4 பேரில் 2 பேர் கைது

நீலகிரி: உதகை அருகே செயல்பட்டு வரும் முத்தூட் நிதிநிறுவன ஊழியர்கள் 4 பேர் 380 சவரன் அசல் நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து 98 லட்சம் ரூபாய் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் பிரபல தனியார் நிதிநிறுவனமான முத்தூட் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பொதுமக்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெறுவது வழக்கம். இதில் அடகு வைத்த நபர் ஒருவர் நகையை மீட்டு விற்பனை செய்ய முயன்ற போது, கவரிங் நகையாக இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அங்கு பணியாற்றி வரும் நகை மதிப்பீட்டாளர் ராஜு, காசாளர் நந்தினி, விஜயகுமார் மற்றும் சத்யபிரியா ஆகியோர் கூட்டு சேர்ந்து அடகு வைத்து, அசல் நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை மாற்றி வைத்தது தெரியவந்தது.

இது தொடர்பாக நிதிநிறுவன மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் கடந்த 6 மாதங்களில் 81 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த சுமார் 380 சவரன் அசல் தங்க நகைகளை எடுத்து அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்தது தெரியவந்துள்ளது. இதில் ரூ.98,30,000 அளவுக்கு பணதை கையாடல் செய்துள்ளதை கண்டறிந்துள்ளனர். இதில் காசாளர் நந்தினி மற்றும் விஜயகுமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாகி விட்ட மற்ற இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர். 


Tags : Muthoot ,Udagai , Udhag, Muthoot Financial Company, 380 shaving, original jewelery, fraud, covering jewelery, Rs 98 lakh, two arrested
× RELATED உதகை அருகே மசினகுடி வனப்பகுதியில் காட்டுத்தீ..!!