×

இலங்கை கடற்படை அட்டகாசம் தொடர்கிறது: ராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் ராமேஸ்வரம் மீனவர்கள் குறைந்த மீன்களுடன் நேற்று கரை திரும்பினர். ஞாயிறு முழு ஊரடங்கு தடை முடிந்ததால், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர்.

அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகை வழிமறித்து மீன்பிடிக்க விடாமல் தடுத்து விரட்டியடித்தனர். இதனால் 100க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள், வேறு பகுதிக்கு சென்று மீன் பிடித்து நேற்று காலை குறைவான மீன்களுடன் கரை திரும்பினர்.
அதே நேரம் மற்ற பகுதிகளில் மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்களின் படகுகளில் அதிகளவில் சங்காயம் எனப்படும் மீன்கள் பிடிபட்டிருந்தன.

படகுகளில் தலா 8 டன் முதல் 12 டன் வரை சங்காயம் மீன்களுடன், மேலும் பலவகை விலை உயர்ந்த மீன்களும் பிடிபட்டு இருந்தன. சங்காயம் மீன்கள் ஒரு கிலோ ரூ.15 வரை விலை போனது. இதனிடையே சிறிய விசைப்படகுகளில் சென்ற மீனவர்களுக்கு 20 கிலோ முதல் 30 கிலோ வரை இறால் மீன்கள் சிக்கின. ஒரு பகுதி மீனவர்கள் வருத்தத்துடனும், பிற பகுதிகளில் மீன் பிடித்து திரும்பிய மீனவர்கள் அதிகளவு மீன்கள் கிடைத்ததால் சந்தோஷத்துடனும் காணப்பட்டனர்.

Tags : Rameswaram , Sri Lankan Navy raid continues: Rameswaram fishermen chase in Mediterranean
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...