×

மாஸ்க் அணிந்தால் மட்டுமே மதுபானம்: டாஸ்மாக் அறிவிப்பு

சென்னை: முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுவிற்பனை செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக மேலாண்மை இயக்குனர் சுப்ரமணியன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக்கூடாது. இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கடையில் அனுமதிக்கக்கூடாது. அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தவறாது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் மற்றும் கையுறை, கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்தல் வேண்டும்.

முகக்கவசம் அணிந்து வரும் நுகர்வோர்களுக்கு மட்டுமே மது வகைகள் விநியோகிக்கப்பட வேண்டும். இந்த அறிவுரைகளை தவிர பல்வேறு கொரோனா நோய் தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட ஏற்கனவே அலுவலக சுற்றறிக்கைகள் வாயிலாக அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளருக்கும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை தவறாது கடைபிடித்து சமூக இடைவெளியை பின்பற்றியும் மற்றும் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும் கொரோனா நோய் தொற்று ஏற்படாத வகையில் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Tasmac , Liquor only if wearing a mask: Tasmac announcement
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்