திருமலையில் கனமழையால் சேதமான 2வது மலைப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் 2வது மலைப்பாதையில் கடந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பெரிய பாறை விழுந்ததில் மூன்று சாலைகள் சேதமடைந்தன. இதனால், திருமலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் முதலாவது மலைப்பாதை வழியாக திருமலைக்கு திருப்பி விடப்பட்டன. இந்நிலையில், பாறைகள் சரிந்து விழுந்த இடத்தில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும், பாறைகள் விழும் நிலையில் உள்ளவற்றை அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே,  கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையிலான அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், சீரமைப்பு பணிகள் பாதிக்காத வகையில் ேநற்று மதியம் 1 மணி முதல் பக்தர்களின் வாகனங்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. 40 நாட்களுக்கு பிறகு பக்தர்களின் வாகனங்கள் 2வது மலைப்பாதை வழியாக திருமலைக்கு அனுமதிக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும், அதிக எடையை ஏற்றி வரக்கூடிய லாரிகள் இணைப்பு சாலை வழியாகவே அனுமதிக்கப்படுகிறது.

Related Stories: