×

பொங்கல் தொகுப்பு கொள்முதலில் முறைகேடு ஏதுமில்லை; இருந்தால் ஆதாரத்தோடு புகார் அளிக்கலாம்; நடவடிக்கை எடுக்க தயார்: அமைச்சர் சக்கரபாணி பேட்டி

சென்னை: பொங்கல் தொகுப்பு கொள்முதலில் முறைகேடு ஏதுமில்லை என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டியளித்தார். பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் முறைகேடு இருந்தால் ஆதாரத்தோடு புகார் அளிக்கலாம் எனவும் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க தயார் என தெரிவித்தார். திமுக ஆட்சியை குறை கூறவே பொங்கல் தொகுப்பு குறித்து அதிமுக புகார் கூறி வருகிறது எனவும் கூறினார். கடுமையான நிதி நெருக்கடியிலும் தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். அவர்கள் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே அதிமுக ஆட்சியில் பணம் வழங்கப்பட்டது என குற்றம் சாட்டினார். திமுக ஆட்சியில் வழங்கி வந்த பொங்கல் பரிசு தொகுப்பை அதிமுக அரசு நிறுத்தியது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி கொரோனா நிவாரண நிதி ரூ.4,000 திமுக அரசு வழங்கியது என கூறினார்.

தலைசிறந்த ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவதால் அதிமுக தலைமை காழ்ப்புணர்ச்சி செய்து வருகிறது என தெரிவித்தார். திமுக ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நேர்மையான முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார். பொங்கல் பரிசுத் தெழகுப்பு தொடர்பான ஓபிஎஸ் - ஈபிஎஸ்சின் பொய் பரப்புரை மக்கள் மன்றத்தில் தோற்கும் எனவும் பேசினார். அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் தற்போது தரமான பொங்கல் பரிசு வழங்குவதை குறை சொல்கிறார்கள்; ஆளும் அரசை குறைகூறும் நோக்கத்தில் ஓ.பி.எஸ். தவறான கருத்துகளை பதிவிட்டு வருகிறார் என அமைச்சர் சாடினார்.


Tags : Pongal ,Minister ,Sakarabani , Pongal package, in purchase, abuse, nothing, Minister Chakrabarty
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா