நடிகையின் 9 மாத குழந்தைக்கு கொரோனா

மும்பை: பிரபல தொலைக்காட்சி நடிகர்களான மோஹித் மாலிக் மற்றும் அட்டிட் மாலிக் தம்பதியின் 9 மாத குழந்தையான எக்பீருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அட்டிட் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மகனுடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், அவர் எழுதியுள்ள குறிப்பில், ‘என்னுடைய வீட்டு உதவியாளர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் அவர் அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். முன்ெனச்சரிக்கை நடவடிக்கையாக நாங்களும் வெவ்வேறு அறைகளில் தனிமைப்படுத்திக் கொண்டோம். எங்களுக்கு கொரோனா நெகடிவ் ரிசல்ட் வந்தது. ஆனால் எங்களது குழந்தை எக்பீருக்கு லேசான காய்ச்சல் இருந்தது. அவனுடைய வெப்பநிலையை சரிபார்த்த போது, அது 102 டிகிரியாக இருந்தது. பரிசோனையில் எக்பீருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதியாகி உள்ளது. தொடர் கண்காணிப்பில் எக்பீரை கவனித்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: