×

சாதித்த அன்றே சர்ச்சை: மன்னிப்பு கேட்டார் ஒல்லி

லண்டன்: இங்கிலாந்து-நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடரில் அறிமுகமான இங்கிலாந்து வீரர் ஒல்லி ராபின்சன்(27) முதல் நாளே நியூசிலாந்தின் டாம் லாதம், ராஸ் டெய்லர் என   2 முக்கிய விக்கெட்களை அள்ளினார். அதனால் பாராட்டு மழையில் நனைய வேண்டிய ஒல்லி, சர்ச்சை சகதியில் சிக்கினார். காரணம் 8 ஆண்டுகளுக்கு முன்பு இனவெறிக்கு ஆதரவாகவும், பெண்களுக்கு எதிராகவும் சமூக ஊடகத்தில் கொச்சையாக கருத்துகளை தெரிவித்திருந்தார். அது இப்போது திடீரென வைரலானது. இப்படி திடீர் ‘வைரலுக்கு’ காரணம், போட்டி தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து வீரர்கள் இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு சீருடை அணிந்திருந்தனர். ஒல்லியை அந்த சீருடையில் பார்த்தவர்களுக்கு பழைய நினைவுகள் வந்து விட்டன. ‘இனவெறி பிடித்தவர், இப்போது போலியாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்’  என்று கருத்து சொல்ல ஆரம்பித்தனர். கூடவே அவரது கருத்துகளையும் மீண்டும் பதிவிட பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதனால் முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் ஓடி வந்த ஒல்லி, ‘விவரம் தெரியாத வயதில் அப்படி தவறான கருத்துகளை வெளியிட்டு விட்டேன். அதற்காக நான் இப்போது மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இப்போது முதிர்ச்சி அடைந்து விட்டேன். முக்கியமான இந்த நாளில் முன்பு பதிவிட்ட இனவெறி, பாலியல் டிவீட்களுக்காக வெட்கப்படுகிறேன். நான் இன வெறியனும் அல்ல…. செக்ஸ் வெறியனும் அல்ல என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். சிந்தனையற்றவனாகவும், பொறுப்பவற்றவனாகவும் இருந்ததற்காக வருந்துகிறேன்’ என்று கூறியுள்ளார்….

The post சாதித்த அன்றே சர்ச்சை: மன்னிப்பு கேட்டார் ஒல்லி appeared first on Dinakaran.

Tags : Apardon ,London ,UK ,New Zealand ,England ,Oli Robinson ,olly ,
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது