காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், காரைக்காலில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோட்டிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 13ல் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து ஜனவரி 14, 15ல் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் குறிப்பிட்டிருக்கிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

இன்று தென்மேற்கு வங்கக்கடல், அதையொட்டிய பகுதிகளில் 3 கி.மீ. உயரத்துக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படக்கூடும். இதன் காரணமாக இடி, மழையுடன் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Related Stories: