×

லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க சூசுல்- மோல்டா அருகே நாளை 14 ஆம் சுற்று பேச்சுவார்த்தை

லடாக்: இந்தியா- சீனா எல்லை பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளின் ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 14 ஆம் சுற்று பேச்சுவார்த்தை நாளை லடாக் எல்லையில் சீன பகுதியான சூசுல்- மோல்டா அருகே நடைபெறுகிறது.  இந்தியா- சீன ராணுவங்களுக்கு இடையே கிழக்கு லடாக் எல்லையில் 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து மோதல் நிலவி வருகிறது. பதற்றத்தை தணிக்க இரண்டு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் தொடர்ந்து பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், லடாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கி கொள்வதில் இந்தியா- சீனா இடையே இழுப்பறி நீடித்து வருகிறது.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற 13 ஆம் சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டது. லடாக் எல்லை பிரச்சனையை தீர்க்க இந்திய தரப்பில் ஆக்கபூர்வமான யோசனைகள் தெரிவிக்கப்பட்டதகாவும், அவற்றை ஏற்க சீனா மறுத்ததுடன், பதற்றத்தை குறைக்க எவ்விதமான ஆக்கபூர்வ யோசனைகளையும் கூற சீனா முன் வரவில்லை என்றும் இந்திய ராணுவம் கூறியது. இந்நிலையில், இந்தியா- சீனாகமாண்டர்கள் மட்டத்திலான 14 ஆம் சுற்று பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது. இதில் இந்திய அதிகாரிகள் குழு லெப்டினன்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா தலைமையில் பங்கேற்றது. 


Tags : Suzuki ,Malta ,Ladakh , Ladakh, border, tension, Suzul-Malta, 14th round, talks
× RELATED லடாக் எம்பிக்கு வாய்ப்பு மறுத்த பாஜ