மன்னார்குடியில் குடிநீர் குழாய் குழியில் 6 அடி நீள நல்லபாம்பு-தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்

மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் கீழ நான்காம் தெருவை சேர்ந்தவர் சரவணன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி சந்திரா. நேற்று காலை தனது வீட்டின் முன்புறத்தில் நகராட்சி குடிநீர்குழாய் உள்ள குழியில் எட்டி பார்த்த போது நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்தபடி சீறியதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார்.

இவரின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்ற வழக்கறிஞர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பாலசுப்ரமணியன், பரமசிவம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து 6அடி நீள நல்ல பாம்பை சாதுர்யமாக உயிருடன் பிடித்து ஒரு பையில் போட்டு அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

Related Stories: