திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை மக்கள் பெட்டியில் போட்டனர்

திருவாரூர் : திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களுக்கான கோரிக்கை மனுக்களை மனு பெட்டியில் அளித்தனர்.மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் மாவட்டம் முழுவதும் இருந்து வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு அளித்து அதற்கான தீர்வினை பெற்று வரும் நிலையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக திங்கட் கிழமைகளில் நடைபெறும் இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் திருவாரூர் மாவட்டத்திலும் இதுபோன்ற இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் கலெக்டர் தலைமையில் நடைபெறும் மக்கள் நேர்காணல் முகாம் போன்றவையும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுவதற்காக கலெக்டர் அலுவலக வாயிலில் மனு பெட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்களது கோரிக்கை மனுக்களை அளப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாததால் இந்த மனு பெட்டியில் தங்களது மனுக்களை அளித்து சென்றனர்.

Related Stories: