திருடு போன டிரான்ஸ்பார்மர்-9 மாதங்களாக மக்கள் அவதி

வேப்பனஹள்ளி :  வேப்பனஹள்ளி அருகே உள்ள கங்கமடுகு கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மின் பற்றாக்குறையை சரிசெய்ய துணை டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதன்பின் வேறு டிரான்ஸ்பார்மர் பொருத்தப்படாததால், இப்பகுதியில் பம்புசெட்டுகள் மற்றும் வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, புதிய டிரான்ஸ்பார்மரை பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: