×

மெக்ஸிகோவில் 3 பேருக்கு புதிய வைரஸான 'புளோரோனா'தொற்று உறுதி: அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

மெக்ஸிகோ: கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும், கடந்த 2 ஆண்டுகளாக டெல்டா, காமா, ஒமைக்ரான் என பல வடிவங்களில் மாறி மக்களிடையே பரவி வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலை தொடர்ந்து மெக்ஸிகோவில் 3 பேருக்கு புதிய வைரஸான புளோரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா வைரஸுடன் இன்புளுயன்சா எனப்படும் குளிர் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் இணைந்து புளோரோனா என்ற புதிய வகை வைரஸ் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகில் முதன் முறையாக இஸ்ரேல் நாட்டில் கர்ப்பிணி ஒருவருக்கு புளோரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மெக்ஸிகோவில் நயாரிட் மற்றும் ஜலிஸ்கோ மாகாணங்களில் இளம்பெண் உட்பட 3 பேருக்கு புளோரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.    


Tags : Mexico ,Florida Ministry of Health , Mexico, 3 people, new virus, fluorona, confirmation, Ministry of Health
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...